எழுதியவர்: சித்திரவேல் சுந்தரேஸ்வரன்
மெய் எழுத்து வார்த்தை: ஏமாற்றம்/ம்
டிரிங்…. டிரிங்….!! வைதீஸ்வரன் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. ஓடி வந்து எடுக்கின்றாள் தமிழினி.
“ஹலோ, தமிழினி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” அவள் அம்மா. “நன்றி அம்மா. எப்படி இருக்கீங்க?” நலம் விசாரித்தாள் தமிழினி.
தமிழினியின் சிறு வயதில் அவள் தந்தை இறந்துவிட்டார். தனது அண்ணன் வைதீஸ்வரனின் வீட்டில் தமிழினியை விட்டுவிட்டு, தூர பிரதேசத்தில் வேலை செய்து பணம் அனுப்புகிறாள் தமிழினியின் தாய்.
“நல்ல சுகம் மகள். உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டாள் தாய். “ஒன்னும் வேணாம்மா. நீங்க எப்பமா வருவீங்க?” என்று கேட்டாள் தமிழினி. அதற்கு “சீக்கிரம் வாறேன்மா. சரி உனக்கு நல்ல பரிசா அனுப்புறேன்.” என்று கூறி தொலைபேசியை வைத்துவிட்டாள்.
பரிசு வாங்க கடனாக பணம் கேட்டிருந்தாள் தாய். ஆனால் இறுதி நேரத்தில் பணம் கிடைக்கவில்லை. மகளுக்கு பரிசு வாங்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் மனம் வருந்தினாள் தாய். தாயின் பரிசை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தாள் தமிழினி.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.