எழுதியவர்: புனிதா பார்த்திபன்
மெய் எழுத்து வார்த்தை: மதிப்பு/ப்
பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே எட்டாம் வகுப்பு படிக்கும் வசந்தின் முகம் ஏதோ
யோசனையில் இருந்தது.
“என்ன கண்ணா?” எனக் கேட்டார் அப்பா.
“அப்பா, இன்னைக்கு எங்க ஸ்கூலுக்கு ஒரு அதிகாரி வந்திருந்தாரு. நான் அவருக்கு பணிவா
வணக்கம் சொன்னேன். அதப்பார்த்துட்டு என் ப்ரண்ட்ஸ் ப்ரவீனும், ஆத்விக்கும் கிண்டல்
பண்ணாங்க. “நம்மளோட டீச்சர்ஸ்னாக்கூட பரவாயில்ல. யார் வந்தாலும் ஓடிப்போய்
வணக்கம் சொல்ற. அவுங்க என்ன உன்ன நியாபகத்துலயா வச்சுருப்பாங்கன்னு சிரிச்சாங்க.
நான் பண்ணது தேவையில்லாததா அப்பா?” எனக் கேட்டான்.
“நீ பண்ணது ரொம்ப சரி கண்ணா. ஒருத்தவங்களப் பார்த்து பணிவா நாம வணக்கம் சொல்றது
அவுங்க மேல இருக்குற மரியாதையினால தான். உயர்வான ஒண்ண மதிக்கணும்ங்குற
எண்ணம் உனக்குள்ள வந்துச்சுனா, நாளைக்கு நீ பெரிய ஆளா ஆகுறப்ப உன்
இலட்சியத்தையும், குடும்பத்தையும் அதே பணிவோட மரியாதையோட பார்க்குற குணம் வரும்.
பணிவு இருந்தா வெற்றியும் தேடி வரும். அதுனால நமக்கு உயர்வானவுங்க யாரா இருந்தாலும்
பணிந்து வணங்குறது நல்ல பண்பு. உன் நண்பர்களுக்கும் சொல்லு” என்றார் அப்பா.
மகிழ்வாய் தலையாட்டினான் வசந்த்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.