எழுதியவர்: நா.பத்மாவதி
மெய் எழுத்து வார்த்தை: மெத்தை / த்
சுதா சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் கணவனின் காதலும் , குழந்தை சதீஷின் சிணுங்கலும், சந்தோஷங்களும் பதிந்து இருப்பதாக உணர்ந்தாள்.
மகன் படித்து வேலைக்குப் போன கொஞ்ச நாட்களில் “அப்பா, அம்மா எனக்கு யு.எஸ் போக வாய்ப்பு கெடச்சிருக்கு கம்பெனில அனுப்பறாங்க” என்றான் சதீஷ்.
பிள்ளையை பிரியணுமே என்ற கவலை, “இரண்டு வருஷம்தாம்மா வந்துடுவேன்” சந்தோஷமாக சொல்ல, சுதா வேறு வழியில்லாது மெளனமானாள்.
போன புதிதில் தினமும் போன்கால் பேசுவான். அதுவும் நாளடைவில் குறைந்தது.
ரெண்டு வருஷம்னு போனவன் அங்கேயே செட்டிலாகி விட்டான்.
காலமும், காலனும் காத்திருப்பதில்லை. மூன்று வருடங்களுக்கு முன் அப்பா இறந்த போது வந்தான். கிளம்புவதற்கு முன் “அம்மா நீ
என்ன பண்ணலாம்னு இருக்கே” என்று கேட்டான். சுதா பதில் சொல்லாது மெளனமாக மகனைப் பார்த்தாள். கடமை மறந்து கிளம்பினான் சதீஷ் .
நெஞ்சின் ஆழத்தில் பதிந்த நினைவுகளை மட்டும் தாங்கிய மெத்தையை மெளனமாக இன்னமும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் சுதா.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.