எழுதியவர்: நா. பத்மாவதி
மெய் எழுத்து வார்த்தை: மர்மம்/ர்
“நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது அவள் புதிதாக சேர்ந்தாள். பார்ததுமே வசீகரிக்கும் முகத்தோற்றம் ” மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் டைரியைப் படித்தாள்
ஆனால் டைரியில் குறிப்பிட்டுள்ள அந்த பெண்ணை அப்பா உயிருக்கு உயிராக காதலித்து பின் ஏன் இருவரும் பிரிந்தனர் என்ற கேள்வி மனதை சுற்றி வந்தது.
மறுபடியும் அவரது அறைக்கு சென்று இருந்த புத்தகங்களுக்கு இடையில் நான்காக மடிக்கப்பட்ட கடிதத்தின் மேலே “டியர் சிநேகா…. ” பிரித்தாள். “மை டியர் கண்ணீர் வழிய “என் மன சோகத்தை தீர்க்க வந்த சித்திரமே ….. என் கல்லூரிக் காதல் நினைவுகளை சொல்ல வேண்டும் என்ற ஆவலில் நேரில் சொல்ல வெட்கி கடிதமாக எழுதியுள்ளேன். உன் அம்மாவோடு சந்தோஷமாக வாழ்ந்தாலும் முதல் காதல் அவ்வபொழுது நினைவில் வரும். நீ எதை நினைத்தும் குழப்பம் அடையாதே. முடிந்தைவைகளை மறுபடி ஆராய்ச்சி செய்தால் வருத்தமே நேரிடும். அவை எல்லாம் மர்மங்களாகவே இருக்கட்டும் மகளே அன்புடன்” என முடிந்தது.
மனதின் கேள்விகளுக்கு பதிலாக இருந்த கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் சிநேகா
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.