எழுதியவர்: இரா.நா.வேல்விழி
மெய் எழுத்து வார்த்தை: வாழ்க்கை/ழ்
என்றோ சிலையாகிப் போயிருந்தாள் சின்னத்தாயி. கூடியிருந்தவர்கள் அழுதுடு தாயி .நெஞ்சுக்குள்ள பாரத்தை வைச்சுக்காதன்னு சொல்லியும் அசையாம உட்கார்ந்திருந்தாள் சின்னதாயி. கூட்டம் வருவதும் போவதும் ஏனென்று தெரியாமல் தன் அம்மாவை கட்டிக் கொண்டது குழந்தை. ஆனால் கண்கள் மட்டும் ஒரே இடத்திலிருந்து அகலவே இல்லை. உறவினர்கள் தன்னையும் கட்டிக் கொண்டு அழுவதைக் கூட உணர முடியாத படி அம்மாவைக் இறுகப் பற்றிக்கொண்டிருந்தது .
உறவினர்கள் எவ்வளவு சொல்லியும் அழுகை வரவே இல்லை. பாரத்தை இறக்கி வைத்ததாகவே எண்ணினாள் . ஆம் பாரத்தை சுமந்து சுமந்து உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது. என்றாவது ஒருநாள் இதனை இறக்கி வைக்க மாட்டோமா என்று தான் இருந்தது. தானும் அழிந்து தன் வாழ்க்கையை யும் அழித்த கணவனின் குடிப்பழக்கமே இவளின் இந்நிலைக்குக் காரணம். எவ்வளவு சொல்லியும் திருந்துவதாய் இல்லை அவன். அவனால் தானும் பிள்ளையும் பட்ட துன்பம் சொல்லி மாளாது.
இனி அவள் விரும்பும் சுமையெல்லாம் சுகமான சுமையே. நெஞ்சுக்குள் எரியும் நெருப்பிற்கு ஆறுதலாய் தன் குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டாள் வைராக்கியமாய் அழவே கூடாதென்று….!!
மதுவை விரும்பியவன்
மனைவியை விரும்பியிருந்தால்
மனதை வென்றிருப்பான்…!!
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.