கடலின் அலைகள் குழந்தையின் சிரிப்பொலியில் கரைந்து போக,
கையில் பிடித்த பட்டம் வானத்தைத் தொடும் கனவுடன் மிதக்கிறது.
சிறுவனின் கால்கள் தரையில் ஓடினாலும்,
அவன் மனம் பட்டத்தோடு சேர்ந்து விண்ணில் பறக்கிறது.
சிறகில்லா பறவையாய், காற்றினில் ஒரு நாட்டியம்,
கயிற்றில் பிணைந்தாலும், எல்லைகள் அற்ற சுதந்திரம்.
கடற்கரையின் ஈர மணலில், காலடித் தடங்கள் பதிந்து செல்ல,
சிறுவனின் கண்களில், வானம் தன் அதிசயத்தை காட்டுகிறது.
இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: வானம் வசப்படும்!
previous post
