எழுத்தாளர்: ஜஃபர்
முதலிரவு அறை.வாட்டசாட்டமான ஓர் ஆணழகன் தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து காலில் விழுந்து வணங்கினாள் தீக்ஷா.ஏங்க…நான் உங்களைவிட அழகில்லை.கலரில்லை.வசதியில்லை…ஆனாலும் எனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க…. நான் கொடுத்து வைத்தவள் என்று பூரித்து கண்ணீர் விட்டாள்…
அவசர அவசரமாக அவளது கண்ணீரை துடைத்தவன், சாலை விபத்தில் இறந்துபோன தன் காதலியின் கண்களைத் தானமாக பெற்று பார்வை பெற்ற மனைவியின் கண்களின் வழியே தன் காதலியைக் கண்டான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
