10 வரி போட்டிக் கதை: அன்பென்னும் பாதை!

by admin 1
66 views

எழுத்தாளர்: அனிஷா.சி

அன்று செமஸ்டர் தேர்வு ! காலையிலேயே கல்லூரி பேருந்தை விட்டுவிட்டேன்.
தந்தையின் புலம்பலுன் பின்தொடர்ந்து பேருந்தில் ஏறினேன். தேர்வரைக்கு செல்லும்
பொழுது கால் சறுக்கி அனைவர் முன்னும் கீழே விழுந்தேன். மாலை வீட்டிற்கு நடந்து
செல்லும்பொழுது நாய்கள் துரத்தின. அன்றைய நாள் மோசம் என்றே நினைத்தேன்..

மாறாக இனிமையாகவே சென்றது. காரணம், பேருந்தில் என்று றியபோது “உட்கார்ந்து
தண்ணி குடி கண்ணு”, சொல்லிய ஓட்டுநரும், கீழே விழுந்தபோது, “ரெண்டு நிமிஷம்
உட்கார்ந்துபோ சாமி” என்று கூறிய துப்புறவு செய்யும் பாட்டியும், நாய் துரத்தியபோது,
“நான் இருக்கேன் ,பயப்படாத மா”, என்று சொன்ன கடைக்காரரும் தான்… பாதை
கரடுமுரடானாலும் அன்பென்ற பூக்களாலே அது தோட்டமாகிறது!

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!