எழுத்தாளர்: இந்துமதி
இன்று அருணின் வீட்டில் அவனது மாமாவின் மகள்
சாம்பவி 10 வருடங்களுக்குப் பிறகு வருகின்றாள் என
ஒரே கொண்டாட்டமாய் இருந்தது.
அவளது 10 வயதில் ஆசையாய் அவளுக்கு ஒரு சோடி
தங்கச் சிமிக்கியை பரிசளித்து இருந்தான்.
இப்போதோ அவளுக்கு இருபது வயது வேறு தன்னை
மறந்து இருப்பாள் என சோகமே இழையோட
அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் வீட்டு வாயிலில் கார் வந்து நின்று
இருக்க, காரில் இருந்து இறங்கிய சாம்பவி “அத்தான்”
என கூவிக் கொண்டே வந்து அவனது கைகளைப்
பிடித்தாள்.
அவளது காதுகளில் அவனது பரிசான சிமிக்கிகள்
அசைந்து ஆடியது அவள் அவனின் அத்தான் மேல்
எல்லையற்ற காதல் வைத்து இருக்கின்றாள் எனப் புரிந்த
கணம் அவளை இறுக அணைத்து இருந்தான் அருண்.
முற்றும்.