எழுத்தாளர்: நா.பா.மீரா
முருகன் முடி திருத்தகம். அண்ணே – ஆளுக்கேத்தா மாதிரி ஹேர் ஸ்டைல் செஞ்சு விடறதுலே –உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது .அமைதியாகப் புன்னகைத்தான் முருகன். எதிர்பார்த்த மாதிரியே தன் ஹேர் ஸ்டைல் அமைந்ததில் திருப்தியானான் வேணு.
ஐநூறு ருபாய் நீட்ட —– சில்லரையில்லையே தம்பி— நாளைக்கு இந்தப் பக்கம் வரும்போது தாங்க—
மறுநாள்–முருகனிடம் பணம் கொடுக்கக் கிளம்பிய வேணு – நமக்கே இவ்வளவு சூப்பரா ஹேர் ஸ்டைல் செஞ்சு விடறாருன்னா – அவரு ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கணும் —எண்ணிக்கொண்டே சலூனின் பின்புறம் இருந்த முருகனின் வீட்டுக்குள் நுழைய எத்தனித்தவன் —- தொப்பி கழட்டி, எண்ணெய் தடவி பளபளப்புடன் காட்சியளித்த முருகனின் வழுக்கைத்தலை கண்டு உறைந்தான் .
முற்றும்.