10 வரி போட்டிக் கதை: இரு வாழைக்குலைகள்

by admin 1
45 views

எழுத்தாளர்: பிரபாவதி ராஜா

வாழைத் தோட்டத்தில் தோழிகளாக வளர்ந்த இரு வாழைக்குலைகள்.
சரி, நாளை காலை வாழைக்குலைகளை அறுவடை செய்யலாம் என்றுகூறினான் தோட்டக்காரன்
உடனே தோழியின் கண்களிலிருந்து கண்ணீர் துளித்துளியாக கன்னங்களில் வழிந்தோடியது.
தோழி ஏன் அழுகிறாய்? என்று கேட்டது அடுத்த வாழைக்குலை.
நாளை தோட்டக்காரர் நம்மை எல்லாம் வெட்டி எடுத்துச் செல்லப் போவதால்,நாம் பிரிய நேரிடுமல்லவா?அதை நினைத்து அழுகிறேன் என்றாள் தோழி. 
நமது கடமையைச் செய்ய வேண்டும்,பின்வரும் பலனை இறைவனிடம் விட்டுவிட வேண்டும், எதற்கும் கலங்கக் கூடாது கீதை நமக்குச் சொன்ன பாதை  இதுவே என்றாள் அந்தத் தோழி.
மறுநாள் வாழைக்குலைகள் வெட்டி எடுக்கப்பட்டு  வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டன.
இரண்டு வாரங்கள் கழித்து, , ஒரு திருமணவீட்டில் மேளதாளங்கள் முழங்க,  மக்கள்மகிழ்ச்சியுடன் இங்கு மங்கும்  பழக்கூடைகளைச் சுமந்து  நடந்து சென்றனர்.
 இரண்டு தாம்பூலம் தட்டு நிறைய வாழைப்பழங்கள் ,மஞ்சள், குங்குமம் வெற்றிலை, பாக்கு, பூ  தாங்கிய பெண்களை மேளத்துக்கப்புறம் ஊர்வலத்தில் நீங்கதான் முன்னே வரணும் சரியா ? என்று அனுப்பி வைத்தார் மஞ்சுளா மாமி.
கல்யாண ஊர்வலம் வரும்… உல்லாசமே தரும் …மகிழ்ந்து நாம் ஆடிடலாம்…என்ற பாடலை நாதஸ்வர வித்வான் வாசிக்க, மேலே உள்ள இரண்டு தாம்பூலத்தின் பழங்களும்  குதித்து ஆடின, ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் உருண்டன.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!