எழுத்தாளர்: கங்காதரன்
கயல் தன் அப்பாவிடம் ஒரு செருப்பு வேண்டும் என கேட்டாள். அவளின் அப்பா கதிரேசன்
அந்த ஊரின் பிரபலமான செருப்புக் கடையில் உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வருபவன்.
மகளின் ஆசைக்கிணங்க விலை உயர்ந்த ஒரு செருப்பினை எப்படியாவது தன் மகளுக்கு
செருப்பு வேண்டும் என்பதற்காக கெஞ்சி கூத்தாடி அடக்க விலைக்கு கேட்டான். ஆயினும்
நிர்வாகம் இது பணக்காரர்களுக்கு உரியது,உனக்கு எதற்கு என்று கூறி அவனை
உதாசீனப்படுத்தி வெளியே தள்ளியது. அந்த நிறுவனத்தின் தொழிற்சங்க நிர்வாகி
இத்தகவலை அறிந்து ஊழியர்கள் அனைவருடன் சேர்ந்து வேலை நிறுத்தத்தை துவங்கினார்.
வேலை நிறுத்தம் என்பது ஒரு ஜோடி செருப்புக்களில் ஒன்றை மட்டுமே மிக அதிகமாக
உருவாக்கினர்.இதன் காரணமாக விற்பனை ஏதும் ஆகவில்லை மாறாக உற்பத்தி
செய்யப்பட்ட அனைத்து செருப்புக் களும் வீணாக தெருவில் வீசப்பட்டது. ஆசையாக தன்
மகள் கேட்ட பணக்காரர்களுக்கே உரித்தாக இருந்த அந்த ஒற்றை செருப்பை மகளுக்காக
கொண்டு சென்றான். ஏனென்றால் அவள் ஒரு மாற்றுத் திறனாளி அனாதையாக இருக்கிறது
மீதமுள்ள ஒற்றைச் செருப்பு.
முற்றும்.
10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
