எழுத்தாளர்: நா.பா.மீரா
சுரபி—– பார்ப்பவர் கண்கள் இமைக்க மறக்கும் அழகு. காந்தம் போல் சுண்டி இழுக்கும் கண்கள்—- செதுக்கி வைத்த சிலை போல் தோற்றம்—- என்ன உயரம் மட்டும் சற்றே குறைவு—அதனால் என்ன பரவாயில்லை — நல்ல ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டு சரி செஞ்சுக்கலாம்—-
மாடலிங் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் சுரபியின் ஒரே இலட்சியம்—கனவு—’எப்படியாவது உலக அழகி போட்டியில் கலந்துக்கிட்டு `ஜெயிக்கணும் ‘—–
இதயத்தில் திடீரென்று சுருக் சுருக்— எனத் தைக்க – வாயுத்
தொல்லையா த்தான் இருக்கும்– எடுக்கும் டாக்டரைப் பார்த்துடலாம்.
மிஸ் சுரபி— இதயத்துக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கு —-ஹை ஹீல்ஸ் அவாய்ட் பண்ணுங்க —–
சோர்வுடன் வீடு திரும்பியவளைப் பார்த்துச் சிரித்தது —அமேசானில் இருந்து டெலிவரி ஆகியிருந்த கண்ணைக் கவரும் ஹை ஹீல்ஸ் .
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
