எழுத்தாளர்: அனுஷாடேவிட்
“மாம்.. பிளிஸ்… எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தான் படிக்க இஷ்டம். ஓகே சொல்லுங்க”
சஞ்சய் தன் அம்மாவிடம் தன் விருப்பத்தை சொல்லி அனுமதி கேட்டிருந்தான்.
“டேய் கண்ணா.. மாம் உன் நல்லதுக்கு தான் சொல்வேன். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்
எடுத்தினா நீ உலகம் முழுக்க பறக்கலாம். பைலட்னு உனக்கு ஒரு பெரிய அந்தஸ்து
கிடைக்கும்டா” தன் பங்கு சலவையை மகனின் மூளையில் திணித்து கொண்டிருந்தார் சஞ்சயின்
அன்னை சுபலதா.
“ம்ம்ம் சரிங்க மாம் “ சுரத்தையே இல்லாமல் உரைத்தவன் தந்தையை ஒரு பார்வை பார்த்தபடி
அறைக்குள் சென்று விட்டான்.
“சுப்பு நீ பண்றது சரியில்லை. அவன் தான் இஷ்டம் இல்லைனு சொல்றானே. அப்புறம் ஏன்
இப்படி பேசுற” ரூபன்
“என்னங்க நீங்களும் இப்படி பேசுரீங்க? பைலட் ஆனா இந்த உலகம் முழுக்க ஒவ்வொரு பருவ
நிலையையும் ரசித்து ரசித்து சுத்தி வரலாம். நாம இருக்கும் இடத்தை மேலே இருந்து பாக்கிறது
எவ்வளவு அதிர்ஷ்டம் தெரியுமா? “
“புரியாமல் பேசாத சுப்பு”
“நானாங்க புரியாமல் பேசுரேன். பைலட் ஆகனும்ன்ற என்னோட ஆசைதான் கானல் கனவா
போயிடுச்சு. அதை என் மகன் மூலமா நிறைவேத்திக்க நினைக்கிறது தப்பா?”
“நீயே சொல்லிட்ட சுப்பு இது உன்னோட ஆசை உன்னோட கனவு. உங்க வீட்டில் படிக்க
வைக்காமல் போனதும் உன் இலட்சியம் நிறைவேறாமல் போனதும் நீ எந்தளவுக்கு உடைஞ்சி
போயிருப்ப அதை உன் மகனுக்கு கொடுக்க போறீயா?” என்று சொன்ன அடுத்த நொடி
“டேய் கண்ணா .. சஞ்சய் தங்கம் நீ என்ன படிக்க ஆசபடுறீயோ அதையே படிடா உன் சந்தோஷம்
தான் எங்க சந்தோஷம்” என்று சஞ்சய் அறையில் சென்று சுபலதா உரைத்திட தந்தை மகன்
இருவரும் சந்தோஷத்தில் குதித்தனர்.
“மாம்.. நான் படிச்சு முடிச்சு வேலைக்கு போனதும் நாம மூணு பேரும் வேர்ல்ட் டூர் போலாம்.
உங்களுக்கு எப்பலாம் பறக்க ஆசையோ சொல்லுங்க நான் கூட்டிட்டு போறேன்” என்று உரைத்த
சஞ்சயை அணைத்த சுபலதாவின் கண்களில் சந்தோஷநீர் பளபளத்தது. மனமோ விண்ணில்
பறந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
