எழுத்தாளர்: கு.லீனா ஶ்ரீ
இரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ஒரு சிறு மலரை
தண்டவாளத்தின் ஓரத்தில் கண்டேன்.இரயிலில் சென்ற யாரோ
விட்டு சென்ற அடையாளமாய் தோன்றிய அந்த அழகான
பூச்செடிக்கு தெரியவில்லை தான் இருக்க வேண்டிய இடம்
இதுவல்ல என்று.எவ்வளவு அழகாக இருந்தால் என்ன அது ஒரு
பலத்த காற்று அடிக்கும் வரையோ அல்லது ஒரு விரைவு இரயில்
வரும் வரையோ மட்டுமே என்று நினைத்து கொண்டு அதை கடக்க
முற்பட்டேன்.என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்
தளிம்பியது.என் வாழ்வும் இது போல் தான் திறமைகள் இருந்தும்
சரியான குடும்பம் கிடைக்காமல் சரியான சமூதாயம் அமையாமல்
தண்டவாளத்தில் முளைத்த பூச்செடி போல வீணாய்
போயிற்றது.திடீரென ஒரு சத்தம் கேட்டது என்ன என நான் கேட்க
‘இங்கே பார்!’ என அந்த பூ தான் பேசியது.நான் வியந்து அதை
பார்க்க, நான் யாரோ விட்டு சென்ற அடையாளமாய் இருக்கலாம்.
ஆனால் நான் வீணாக போகவில்லை .செடியாக இருந்த நான்
இன்று மலரை பெற்றெடுத்து உள்ளேன்.எதற்காக என்று
நினைக்கிறாய் இதோ என் பூவில் உள்ள மகரந்தம் ஒரு பலத்த
காற்று அடித்தால் வேறு இடம் சென்று நன்றாய் வளரும் என்ற
நம்பிக்கையில் மலர்ந்துள்ளேன்.
காற்றில் வித்தாக பரந்து வந்து இங்கு விழுந்தேன்.இரயிலில் சென்ற
பலர் கை கழுவி சென்ற நீரில் தான் நான் வளர்ந்தேன்.இதை
அவமானமாக நினைத்திருந்தால் இன்று என்னால் ஒரு அழகிய
பூவை உருவாக்கி இருக்க முடியாது. உன் கண்ணீர் என் மேல்
விழுந்ததால் தான் உன்னிடம் கூறிக்கொண்டிருக்கிறேன்,நீ இருக்கும்
இடம் பற்றி கவலை படாதே கலாம் ஐயாவின் வார்த்தையை
நினைவில் கொள் ஏழையாக பிறப்பது உன் தவறல்ல,ஏழையாக
இறப்பதே உன் தவறு.முயற்சி செய்.பல அவமானங்கள்
வரலாம்.உன்னால் நீ நினைத்தைஅடைய முடியும்.இல்லை எனில்
உன் சந்ததியை நீ நினைப்பதை போல் வாழ ஏற்பாட்டை செய்
என்று சொல்லி முடிக்கும் போது ஒரு விரைவு இரயில் வந்தது
அந்த பலத்த காற்றில் அந்த பூவில் இருந்து மகரந்தம் பரந்து
சென்றது.எங்கோ சென்று அது நன்றாக வாழும் என்ற நம்பிக்கையும்
என் வாழ்வும் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் என் நடையை
தொடர்ந்தேன்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
