எழுத்தாளர்: அனுஷாடேவிட்
காலை நேரம் 8.30 க்கு வழக்கமாக வரும் பேருந்து அன்றும் வழக்கம் போல் மக்களை திணித்துக்
கொண்டு அம்பாரம் போல் ஆடி அசைந்து வந்தது. பேருந்தில் நண்பிகள் நால்வர் முகமும் சினந்து
இருந்தது.
“ஹே.. எவன்டி உன்னை டெய்லி உரசிட்டே வரான். சொல்லு இன்னைக்கு என்ன ஆனாலும் ஒரு
கை பாத்துடலாம்” ரோஸி.
“அவ சொல்ல மாட்டாடி. நான் சொல்றேன். அந்தா கட்டம் போட்ட சட்டை போட்ருக்கானே
அவென் தான்” ஜென்னி.
“ஹேய் ரோஸி வேணாம்டி தேவை இல்லாத பிரச்சினைல மாட்டிகிட்டா அப்புறம் எங்க வீட்டில்
காலேஜ் விட மாட்டாங்க” பென்னட்.
ரோஸி கேட்டால் தானே. தன் நண்பிகளை தனக்கு முன் நிறுத்தி விட்டு அந்த ஆடவனின் அருகில்
நின்று கொண்டாள்.
அவனின் பார்வை இவள் மீது விழ, அந்நேரம் தடையணை (speed break) வரவும் பேருந்து ஏறி
இறங்கிய அந்த ஒரு நொடி ரோஸி ஒரு காலை பேலன்ஸ்காக பின் வைக்க அந்த ஆடவன் “ஆ…
ஆ… “ என்று அலறினான்.
ரோஸியின் கால்களில் புதியதாக இடம் பெற்றிருந்த பென்சில் வகை உயர் குதிகாலனி தன்
பணியை செய்த வெற்றி களிப்பில் ஜொலித்தது.
“ஓஹ்.. சாரி ப்ரோ” என்றவாறு திரும்பி கொண்டாள். வலியின் அளவை அவன் முகம் பிரதிபலிக்க
நண்பிகள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.
மீண்டும் தடையணை வர அதைப்போலவே ரோஸி செய்திட அவன் கால்களில் காயம்
அதிகமானது. மறுநாளிலிருந்து அவன் இவர்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
“நமக்கு ஒரு பிரச்சனைனா நாமதான்டி தைரியமா எதிர்கொள்ளனும். இந்த மாதிரி ஆட்களுக்கு
இதுதான் சரியான தண்டனை. இனிமேல் எதுக்கும் பயபடாம காலேஜ் போகலாம்” என்று
கெத்தாக ரோஸி சொல்ல நண்பிகள் ஆமோதித்து மகிழ்வுடன் கல்லூரி வாசலில் நடந்து
சென்றனர் உயர் குதிகாலனியுடன்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
