10 வரி போட்டிக் கதை: சாலை விதி

by admin 1
73 views

அமெரிக்காவிலிருந்து வந்த 17 வயது பேத்தியுடன் ராமநாதன் காரில் பயணம் செய்தார்.  அப்போது டிராபிக் லைட் சிவப்பு நிறத்தில் வர அதை தாண்டிய தாத்தாவைப் பார்த்து “தாத்தா நீங்கள் இப்படி செய்யலாமா?” என்று கேட்டார் “யாருமில்லையே நாம் போனால் என்ன?” 

” சிவப்பு விளக்கு இருக்கும்போது போகக்கூடாது தாத்தா. 

அமெரிக்காவில் இப்படி செய்தால்   போலீஸ்காரர் வந்து  லைசென்ஸ் கேன்சல் செய்து விடுவார், நீங்கள் இவ்வளவு வயதானவர் இப்படி சாலை விதியை மதிக்காமல் போகிறீர்களே?”  என்று பேத்தி சொன்னதை கேட்டதும் வெட்கத்தால் தலை குனிந்து “இனி நான் ஒருபோதும் இது போல செய்யமாட்டேன்.

நல்லதொரு பாடம் சொன்னாய் நீயே எனக்கு குரு” என்று தன் பேத்தி அணைத்து முத்தமிட்டார் தாத்தா ராமநாதன்.   

“யார் வந்தால் என்ன இருந்தால் என்ன தாத்தா சாலை விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா அதை மதிப்பது தானே நமக்கு பாதுகாப்பு” என்று சொன்ன பேத்தியை ஆசையுடன் பார்த்தார் தாத்தா. 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!