எழுத்தாளர்: S. முத்துக்குமார்
சென்ற மாதம் மால் க்கு சென்ற போது ஆறு வயது மகன் ஆசைப்பட்டானே என்று கேம்ஸ் ரூமில் நுழைந்தோம்….பிளே ஸ்டேஷன் ல் இருந்தவன், “குழந்தைகளுக்கு கான்சென்ட்ரேஷன் வளரும், வேகமாக முடிவு எடுக்கும் திறன் வரும்…” என்று எங்களுக்கு கிளாஸ் எடுத்ததை அடுத்து, மகன் அமர, காதில் பெரிதாக ஏதோ மாட்டி, கையில் ரிமோட்டை தந்தவுடன் …பையன் தன்னை ஒரு பைலட் ஆக நினைத்து வானில் பறக்க ஆர்மபித்து விட்டான்.
எங்களுக்கும் மகிழ்ச்சி தான். அடுத்த நாள் அவனுக்கான புது பிளே ஸ்டேஷன் வாங்கியாச்சு. சோறு, தூக்கம், படிப்பு என்று ஒவ்வொன்றாக துறந்து, கண்கள் இடுங்கிப்போய் ….இப்போது கவுன்செல்லிங் வந்திருக்கிறோம்….”செல்லம் கொடுத்து கெடுத்தோம் 90s கிட்ஸ் ஐ….செல் போன் கொடுத்து கெடுத்தோம் 2000 கிட்ஸ் ஐ….பிளே ஸ்டேஷன் கொடுத்து கெடுக்கிறோம் 2010s கிட்ஸ் ஐ ….இதில் செல்லம் கொடுக்கப்பட்ட 90s கிட்ஸ் நீங்க, அதான் இப்படி …” எங்களுக்கு கிளாஸ் எடுத்தார் அங்கிருந்தவர்……
முற்றும்.
