எழுத்தாளர்: நா.பா.மீரா
குஷன் போன்று மெத்தென்று இருந்த அந்த சொகுசுக்காரில் மெதுமெதுவே எம்பிக்குதித்து மகிழ்ந்தனர் குழந்தைகள்.
நீண்ட தூரப் பயணம் —- அங்கங்கே நிறுத்தி ஐஸ்க்ரீம் —- சாக்லேட் என வகை வகையான திண்பண்டங்கள் . ஐ ரொம்ப ஜாலியா இருக்கு—- குழந்தைகள் மகிழ்ந்து ஆரவாரிக்க, பூரித்துப்போனான் ரிஷி .
இனிய தருணங்கள் —–விழி மற்றும் நிழல் காமிராவில் சேமித்தான் ரிஷி.
சூரியன் மேற்கு வானில் ஓய்வெடுக்கச் செல்ல —–கடற்கரை அலைகளில் குழந்தைகளுடன் விளையாடி ——–
மனைவி, குழந்தைகள்— இழப்பின் வெறுமை —-தனிமை —-கை நீட்டி அழைத்தது —- ஆசிரமக் குழந்தைகளை பத்திரமாக ஒப்படைத்து வீடு திரும்பிய ரிஷியை.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
