எழுத்தாளர்: நா. நாகராஜன்
சுரேஷ் திருச்செந்தூர் வர ரொம்ப விரும்புவா ன், அவன் ஊரில் இருந்து 50 கி மீ தூரம்
தான். கோடை விடுமுறையில் நண்பர்கள் ஊட்டி, கொ டைக் கானல் போய் வந்ததை
சொல்லும் போது குறைந்த பட்சம் திருச்செந்தூர் போக ஆசைப்பட்டு அம்மாவிடம்
கேட்பான். அப்பா என்ன செல்வார் என்ற பயம் அவளுக்கு. சரிவான கடற்கரையில்
கூட்டம், கோவில் பார்க்க அத்தனை ஆசை. ஒரு தடவை ஒரு கல்யாணம் போ
னபோது பார்த்தது. கோபம் வந்தால் கண் மண் தெரியாமல் அடித்து விடுவார்
அம்மாவை. கோப மாக வந்தது அப்பா விட மு ம், ஆண்டவன் இடமும், எனக்கு இந்த
அப்பா வேண்டாம். பள்ளியில் கணக்கு பாடம் நடக்கும் போது நடராஜன் மாமா
சைக்கிளில் தேடி வந்தார்.
வீட்டிற்கு வந்த பின் கூட்டம் தன்னை பரிதாபமாக பார்ப்பது, அம்மாவின் ஆழ்ந்த
அழுகை அவனுக்கு எதையோ சொன்னது,லாரி விபத்தில் ஆண்டவன் ஜெயித்து
விட்டார். இறுதி காரியம் முடிந்து மொ ட்டை போட்ட போது, தொ ப்பி ஆசை வந்தது.
ஆச் சி தான் சொன்னா, இந்த மொ ட்டை க்கு தொ ப்பி வைக்க கூடாது என்று.
முற்றும்.
