எழுத்தாளர்: நா.பா.மீரா
விழிப்பு தட்டிய ஜெகன் சோம்பல் முறித்தவாறே அருகில் படுத்திருக்கும் தம்பி மோகனைப் பார்க்கிறான். குற்றாலம் சுற்றுலா என்று சொல்லிக் கூட்டி வந்திருக்கிறான் .
இந்த ஊரிலேயே இவனைத் தலைமுழுகினாத்தான் நிம்மதி என் குடும்பத்தைப் பார்க்கிறதே கஷ்டம் அதுல சித்தியும் இறந்து இவன் வேற எல்லாம் இந்த அப்பனால
சன்னல் அருகே வந்து நிற்கிறான் . கொட்டும் அருவி நம்பிக்கைக் கீற்றாய் தென்னை ஓலைகளின் இடையே தெரிந்த ஆதவனின் ஒளி
ஆஹா அற்புதம்
அதோ தவழும் நிலையில் ஒரு பெரியவர் அருகே அழும் சிறுவனுக்குத் தன் உணவைக் கொடுத்து நெகிழ்ந்தான் ஜெகன் தன் இளைய தாய் மகனுக்கும் ஊர் திரும்ப டிக்கெட் போட்டு மோகனை எழுப்புகிறான் .
முற்றும்.
