எழுத்தாளர்: குரங்கி
உனக்கு என்னடி வேணும் கேளு என்று ஆசையாய் அவன் கேட்க, நீ எனக்கு சொந்தமானாலே போதும் இந்த உலகத்துல நான் ஆசைப்படுவதற்கு ஒண்ணுமில்லை என்று கூறி அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். இரு கைகளால் அவளின் முகம் ஏந்தி இதழில் இதழ் பதித்து நான் எப்போதும் உனக்கானவனடி என்று கூறி தனது நான்கு வருட காதலின் வலிமையை ஒவ்வொரு நாளும் இவ்வாறாகவே அவளுக்கு விளக்கி கொண்டிருந்தான்.
ஒருநாள் அவளது அவன் அவளிடம் வந்து எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சு. இனி நான்….. என்று இழுக்க அவளுக்கு புரிந்து விட்டது. உயிராய் நேசித்தவன் அவள் உடலை தான் நேசிச்சிருக்கிறான் என்று… அவள் இதயம் சுக்கு நூறாக உடைந்து கொண்டிருக்க….. அவனோ என்னை மறந்து விடு நான் அந்த பொண்ணுக்கு துரோகம் செய்ய முடியாது என்று நல்லவன் மாதிரி பேச…. அப்போதும் அவனுக்கு விளங்க வில்லை துரோகம் இழைக்கப்பட்டவள் இவள் என்று….
அவளது கண்களில் இருந்து கண்ணீர் உற்றாய் இரைக்க, அவனோ புதுமாப்பிள்ளை வேசத்திற்கு தயாராகினான்.
அவனது நினைவுகளை விட்டு நீங்க முடியாமல், அவனை மறக்க முடியாமலும் தனது நிலையைக் கண்டு அவளே பரிதாபப்படும் நிலைக்கு ஆளானாள்.
இறுதியாக அவனது நினைவுகளைத் துறக்க புதுமுகம் தேடி புகலிடம் நோக்கியே அவளது பயணம் துவங்கியது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
