எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி
நான் வேலையை முடித்து வீடு வந்ததும் மகன் ராமு அம்மா மீது புகார் வாசித்தான்.
“அம்மா தினமும் நீ வேலைக்கு கெளம்புன உடனே நான் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே வெளியே போயிட்டு நான் வீட்டுக்கு வந்தப்பறம்தான் அவங்க வர்ராங்க “
வெளியே போறப்ப முகம் நிறைய மேக்கப்பும் ஓவரா லிப்ஸ்டிக்கும் போட்டுக்கறாங்கப்பா.
மகனின் வார்த்தையைக் கேட்டதும் எனக்குள் சந்தேகப் பேய் தாண்டவமாட ஆரம்பித்தது.
மனைவி ராதா அப்படி தெனமும் எங்கேதான் போறா?
என்னோட சம்பளம் பத்தலேங்கறதுனால ஒருவேளை உடம்பை வித்து சம்பாதிக்கலான்னுதான் ஓவர் மேக்கப்ல போறாளா?
வரட்டும், இன்னைக்கு ரெண்டு ஒண்ணு கேட்டுடறேன் என்று தீர்மானித்தபோது மனைவி உள்ளே நுழைந்தாள்.
மனதில் இருந்த சந்தேகத்தை கேள்வி ஆக்கினேன்.
“ஏங்க, உங்க குடும்ப பாரத்தை பகிர்ந்துக்கலான்னு பக்கத்துல இருக்குற பியூட்டி பார்லருக்கு வேலைக்கு போறேன், நான் அழகா மேக்கப்போட இருந்தாதானே மத்த பொண்ணுங்க வருவாங்க. அதான்.
சேச்சே, மனைவியை தப்பா நினைச்சுட்டேனே என்று வருந்தியவன் மனைவியை கட்டி அணைத்தபோது அதில் இரக்கமும், இறுக்கமும் இருந்தது.
முற்றும்.