10 வரி போட்டிக் கதை: மறக்குமா நெஞ்சம்

by admin 1
63 views

எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் 

  • “அம்மா இங்கே வா மா என அனு சத்தம் போட என்ன ஏதோ என பதறி போய் பானு ஓடி வர அனு ஒரு இடத்தை கை காட்டினாள். 
  • அங்கே ஒரு மழைக்காளன் முளை விட்டு இருந்தது இரண்டு நாள் பொய்த்த மழையின் விளைவு 
  • அதை பார்த்ததும் எனக்கு சட்டென என் தங்கை அஞ்சலி நினைவுக்கு வந்தாள். 
  • சிறு வயதில் இப்படி மழை பெய்யும் போது எங்க வீட்டில் காளான் முளைப்பது உண்டு.
  • முதலில் புதுமையாக எங்களுக்கு இருந்தது பிறகு அம்மா சொல்லி தான் தெரிந்தது. 
  • அஞ்சலிக்கு மழைக்காளான் ரொம்ப பிடிக்கும் மழை விட்ட பிறகு அதை பிடுங்கி கொண்டு வருவாள். 
  • அதை தன் பொம்மை வீட்டுக்கு அலங்காரம் பண்ணி விளையாடுவாள் நானும் அவள் கூட சேர்ந்து விளையாடுவேன். 
  • இன்று இதை பார்த்ததும் அவள் ஞாபகம் பத்து வயது வரை எங்க கூட இருந்தவள் மஞ்சள் காமாலை காரணமாக எங்களை விட்டு நிரந்தரமாக போய் விட்டாள். 
  • இன்று அதை அவள் முதல் எழுத்தை பெயராக கொண்ட என் மகள் நினைவுபடுத்தி விட்டாள். 
  • “அம்மா  வா மா அதை எனக்கு பறித்து தா” என அழைக்க என் தங்கை நினைவுடன் என் பெண்ணு கேட்டதை பறிக்க எழுந்தேன். 

முற்றும்.

10 வரி கதை போட்டியில் கலந்துக்  கொண்டு வெற்றி பெறுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!