எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
இரண்டு மாதமாக மண்டையை குழப்பிக் கொண்டிருந்த ப்ராஜெக்ட் முடிந்தது விட்டது. அதற்கு சிறிய விருந்து ஏற்பாடு செய்திருப்பதாக மேனேஜர் கூறியதை மனைவியிடம் சொல்லி, நாளை சாப்பாடு கட்ட வேண்டாம் என்றான் வெங்கட்.
“பார்ட்டியா.. அப்படியென்றால்? “என்று கணவனை முறைத்துப் பார்த்தாள் அவனின் தர்மபத்தினி.
“ச்சேச்சே.. அதெல்லாம் இருக்காது டி” என்றான்.
“இருந்தாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் மட்டும் குடித்தீர்களே என்றால் அவ்வளவுதான்” என்றாள் கோபமாக.
“பானத்தின் போதையை விட, இந்த பாவையின் போதை அதிகம். நீ அருகில் இருக்கும் பொழுது நான் குடிப்பேனா?” என்று சொல்லி அவளின் இதழில் முத்தம்மிட்டான்.
மறுநாள் பார்ட்டியின் போது, குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சே என்பது போல் நேற்று மனைவியிடம் சொன்னது மறந்து, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.
அவன் வந்த நிலைமையை வைத்தே அவன் குடித்து இருப்பதை உணர்ந்த மனைவி, தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தாள்.
அவளை சமாதானப்படுத்துவதற்காக அணைத்தவனை தள்ளி விட்டுவிட்டு, “இனிமேல் என்னை தொட்டீர்களே ஆனால் அவ்வளவுதான்” என்று தள்ளி படுத்து விட்டாள்.
வெளியில் மழையின் குளுமை, உள்ளே சென்ற பானத்தினால் ஏற்பட்ட போதையில், உடல் மனைவியை நாட, அவளோ உன் சுண்டு விரல் கூட என் மீது படக்கூடாது என்று சொல்லி உறங்கி விட்டாள்.
அவனும் தன் தாபத்தை அடக்கிக் கொண்டே போதையில் உறங்கினான்.
விடியலில் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தவனின் காதில் திடீரென்று மனைவியின் அலறல் சத்தம் கேட்க, வேகமாக எழுந்து சத்தம் வந்த திசை நோக்கி ஓட, குளியல் அறையில் மோடாவில் மீது ஏறி நின்று அலறிக் கொண்டிருந்தாள் வெங்கட்டின் தர்மபத்தினி தரையில் ஓடும் கரப்பான் பூச்சியை கண்டு பயந்து.
குளித்த முடித்த தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, வெறும் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு நிற்கும் மனைவியை கண்டதும் அடித்த போதை எல்லாம் தெளிந்து, பித்தம் தலைக்கேறி அவளின் அருகில் நெருங்க,
அவளோ “ப்ளீஸ் வெங்கட். அதை தூக்கி தூர போடு” என்று கண்களை மூடி கத்திக் கொண்டிருந்தாள்.
அவனும் வீரமான ஆண் மகனாக, காலால் கரப்பான் பூச்சியை நசுக்கி தூக்கி எறிந்து விட்டு, மனைவியை குளியல் அறையில் இருந்து காப்பாற்றி தூக்கி வந்து படுக்கையில் போட்டு அணைத்தான்.
தன்னை காப்பாற்றிய மகிழ்ச்சியில் அவளும் அவனின் அணைப்புக்கு இணங்கி அவனுள் அடங்கினாள்.
முற்றும்.