எழுத்தாளர்: குட்டிபாலா
நாட்கள் 3 ஆகியும் மேலாளர் மேகலா (ஹிட்லர்)விடமிருந்து பதிலில்லாததால் மாலை நேரில் கேட்டுவிட தீர்மானித்தான்.
“ஸார். மேடம் கொடுத்தாங்க” என்று ப்யூன் தந்தது “WELCOME” என்ற மிதியடி வாங்குவதற்கான ஒப்புதல்.
கூடவே 3 நாட்களுக்கு முன் கொடுத்த அவனது கடிதம்-
அதிலும் WELCOME என்ற மேகலாவின் எழுத்துக்கள்.
“பரிமளா, ஞாயிறன்று முறைப்படி பெண் கேட்டு வருகிறோம். ஹிட்லர்–ஸாரி-அத்தையே Welcome சொல்லிட்டாங்க” என்று மொபைலில் சொல்லிவிட்டு மேகலாவின் அறைக்குள் சென்று “தாங்க்ஸ்” என்ற குமணனிடம் “வெல்கம்” என்று சிரித்தாள் மேகலா.
முற்றும்.