எழுத்தாளர்: திவா இராஜேந்திரன்
இறந்துகிடந்த அப்பாவின் உடலின் முன் அவர் வாழ்ந்த பெருமையும்,
புகழையும் அவரின் மகன் விவரித்துக்கொண்டிருந்தான். “எங்க அப்பா ஒரு
காலத்துல இந்த ஊரையே கோட்டை கட்டி ஆண்டார். அடிக்கடி சொல்லுவார்
நம்ம கவரிமான் வம்சம்டா மகனே! மானம் தான் நம்ம வேட்டி, சட்ட. மானம்
போச்சுன்னா அடுத்த நிமிஷமே உசுர விற்றனும்னு சொல்லுவார்” என்று
மீசையை முறுக்கிக்கொண்டே பிறந்த வம்சதின் பெருமை
பேசிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று தன் உடலை நெளித்துக்கொண்டு
வேட்டி, உள்ளாடை அனைத்தும் கழட்டி வீசினார். அருகே இருந்தவர்கள்
தங்கள் துண்டால் மறைத்து அவரின் மானத்தை காத்தனர். எழவு வீடு வாய்
பொத்தி சிரித்தது. கோட்டை கட்டி காத்த மானத்தை வேட்டிக்குள் நுழைந்த
கரப்பான்பூச்சியிடம் கோட்டைவிட்டான் மகன் என்று தெரியாமல் சவமாய்
கிடந்தார் சாத்தப்பன்.
