10 வரி போட்டிக் கதை: வெய்யில்

by admin
70 views

எழுத்தாளர்: உஷாராணி

“ஊர்ல இல்லாத தொப்பிக்கட வச்சிருக்கான் உங்கப்பன். அவனாண்ட போய் தொப்பி வேணும்னு
அளுவுறியே அறிவில்ல உனக்கு” என்று அகிலா அழுதுகொண்டிருந்த மகனின் முதுகில் வைத்தாள்
ஒன்று. சுட்டெரிக்கும் வெய்யிலை விடக் குறைவாகவே உறைத்தது அறை. தொடர்ந்து அழுதான்.
“மூணு வாரமா புள்ள கேக்குதே வெய்யிலுக்குத் தொப்பி வாங்கியான்னு.. உன் ராஜா
வூட்டுத்தொப்பிக் கடைலருந்து ஒண்ணு எடுத்தா கொறஞ்சா பூடுவ “ என்று முனகினாள்.
“உங்கப்பனா கடை வச்சித் தந்தான்.. வோணும்போது எடுக்க.. கணக்கு சொல்லணும்டி..
துப்பட்டாவத் தலைல போட்டுக் கொண்டு போய் வுடு ஸ்கூல்ல” என்று நடையைக் கட்டினான்
ஜேம்ஸ்.
மெயின் ரோடில் கட்சித் தலை வருகிறாராம். கொடி காட்ட மகளிர் அணி தேவை என்று அகிலாவை
இழுத்துப்போனார்கள். 42 டிகிரி வெயிலில் நிற்க இனாமாகக் கிடைத்த தொப்பியுடன்
வதங்கிப்போய் வீடு வந்தாள் அகிலா.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!