10 வரி போட்டிக்கதை: டேய் மச்சான்

by admin
35 views

எழுத்தாளர்: வினோத் சிங்

டேய் மச்சான் எங்கடா இருக்க……
வியாபாரத்தில் அத்தனை பணத்தையும் இழந்ததால் தற்கொலை எண்ணத்தில் தண்டவாளம் அருகே உட்கார்ந்து இருக்கும் ராகவனின் செல்போனில் கேட்ட குரல் ராகவனின் நண்பன் செல்வத்துடையது….

“மன்னிச்சிடு மச்சான் எல்லாம் முடிச்சது”….

என பதில் சொல்லி தன் செல்போனை வீசி எறிந்து விட்டு, தண்டவாளத்தில் தலையை வைத்தான் ராகவன்!

அனைத்தும் முடிந்து விட்டது வாழ்க்கையே அவ்வளவுதான்…. என தன் தலையை நசுக்க வரும் ரயிலை எதிர்நோக்கி காத்திருக்க அவனின் கண்களில் விழுந்தது…

இரும்பில்(தண்டவாளத்தில்) உயிர்த்த செடியில் இரு மலர்கள்…..

தன்னம்பிக்கையின் தத்துவத்தை ஒரு நொடியில் உணர்ந்தான் ராகவன்!

சில காலம் மட்டுமே வாழப்போகும்… இந்த சிறு செடி எவ்வளவு புன்னகையை தன் பூக்களால் பூக்கிறது!

அதுவும் இரும்புப் பாதை அருகில், தடதடக்கும் ரயில்கள் உரசி செல்லும் நிலையில்..

மிக கடினமான சூழலிலும் தன் வாழ்வை மகிழ்வுடன் அந்தச் செடிகள் வாழ்வதாக இவனுக்கு தோன்றியது!

எதுவும் முடிந்துவிடவில்லை… இன்றுதான் தன் வாழ்வின் துவக்கம் என…

புது வாழ்வை நோக்கி, தூக்கி எறிந்த தன் செல்போனை எடுத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் தண்டவாளத்தின் அருகே பாதுகாப்பாக நடக்க துவங்கினான் ராகவன்! 

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!