10 வரி போட்டிக்கதை: தெய்வானை அழைக்கிறாள்

by admin
41 views

எழுத்தாளர்: பாலாஜி இராமதிலகம்

தெய்வானை என்னை பார்த்து சிரிக்கிறாள் என்று அலறியவன் தூக்கத்திலிருந்து கண்களை திறந்தான். ஒரு பழைய பங்களா அதன் அலமாரிகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள், அழகான சிறிய பொம்மைகள், கைவினை பொருட்கள், இவையெல்லாம் சுவற்றின் மூலைகளில் தொங்க விடப்பட்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் நன்றாக இருந்தது. அறையின்  நடுவில் ஒரு மேசையும் அதன் முன் பெரிய நாற்காலியும் இருந்தது. இந்த நாற்காலியில் நான் எப்படி  வந்தேன் என்று யோசித்துக் கொண்டே வடக்கு திசை நோக்கி திரும்பினான். அங்கு சுட்டெரிக்கும் தீயில் தெய்வானை எரிந்து கொண்டிருந்தாள். ஐயோ… உடல் எரிகிறதே… என்னை காப்பாற்றுங்கள் என்ற கூக்குரல் பலமாக கேட்டது. இதைப் பார்த்த சுந்தர், ஐயோ தெய்வானை… தெய்வானை… என்று அலறி அழுதான். அறையின் கதவை திறந்து  கொண்டு வெளியே வந்தார் மருத்துவர். அம்மா உங்கள் மகனுக்கு வந்திருக்கும் நோய் “டெலூஷன் டிஸாடர்” கண்முன்னே தன் மனைவி தீ விபத்தில் இறந்து போனதை  ஏற்க்க முடியாமல், அவள் தன்னை அழைப்பது போலவும், சிரிப்பது போலவும் தானே கற்பனை செய்து கொண்டிருக்கிறார். அவர் குணமாக இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று சுந்தரின் அம்மாவிடம் கூறிவிட்டு மருத்துவர் சென்றார்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!