எழுத்தாளர்: கல்யாணராமன் நாகராஜன்
மூன்றாம் வகுப்பறையில் நுழைந்ததும், சட்டை காலரை தூக்கி விட்டு, தலையை கோதி கொண்டே, உள்ளே வந்தா இரண்டு நண்பர்கள், சக நண்பர்களை பார்த்து..
டேய், நாங்க இரண்டு பேரும், தினமும் ஸ்கூல் முடிச்சிட்டு போறப்போ, அந்த தண்டவாளம் ஓரத்துல ஒண்ணுக்கு அடிச்சு விளையாடுனோம்.. திடிர்னு, இன்னைக்கு பார்த்தா, இரண்டு குட்டி செடி அந்த இடத்துல வந்துருக்கு… ஒன்னு நான் அடிச்சது, இன்னொன்னு இவன் அடிச்சது…என்று சொல்லி சிரித்து கொண்டே இருக்க..
டேய், நாங்களும் வரட்டுமா….எங்க ஒண்ணுக்கும் செடி ஆகட்டும்…குட்டியா தோட்டமே வரும்…அவ்ளோ போவேன்… ஹஹ்ஹ… இங்கே இவர்கள் சந்தோஷத்தில் சிரிக்கிறார்கள்..
வேகமாக இரயில் போகும் நேரம்.. தண்டவாளத்தின் ஓரத்தில் காற்றுக்கு பூக்களும் சிரிக்கிறது..இருக்கும் இடமே போதும் என்றால், எதுவம் மகிழ்ச்சியே…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
