10 வரி போட்டிக்கதை: இளமை

by admin
34 views

எழுத்தாளர்: லஷ்மி திருமகள்

தனலட்சுமி அம்மாள் அந்த அதிசய விளக்கை எடுத்து அன்றைக்கே நீ என்னிடம் கேட்டாய் அல்லவா “உனக்கு என்ன வேண்டும் என்று. இப்போது நான் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தாள். என்னை நீ சிறு பெண்ணாகவும் நவீன பெண்ணாகவும் அரைகுறை உடையில் கவர்ச்சியாகவும் மாற்றி விடுகிறாயா” என்று கேட்டதும் சரி என்று சொல்லிவிட்டு உடனே மாற்றி விட்டது.

இப்பொழுது தனலட்சுமி அம்மாள் தன்னை சுற்றி இருக்கும் உலகத்தை பார்த்தாள் .யாரும் அவளை மதிக்கவில்லை. கண்களால் அவளை ஏதோ தாழ்வாக பார்த்தனர். உடனே நினைத்துக் கொண்டாள் .நாம் முதுமையாக இருக்கும்போது எவ்வளவு பேர் என்னை கண்ணியத்துடன் பார்த்தார்கள். என்னை வணங்கினார்கள். உன்னுடைய ஆசீர்வாதம் தேவை என்று சொன்னார்கள். உங்கள் அனுபவத்தால் எங்களுக்கு அறிவுரை கூறு என்று சொன்னார்கள். எனக்கு அது போதும். இந்த தாழ்வான கண்ணியமற்ற பார்வை எனக்கு வேண்டாம். அற்புத விளக்கே! மீண்டும் என்னை பழைய கிழவியாகவே மாற்றி விடு” என்று சொன்னதும் விளக்கின் உதவியால் மீண்டும் பழையபடி கிழவியாகவே மாறினாள்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/

You may also like

Leave a Comment

error: Content is protected !!