எழுத்தாளர்: நா.பத்மாவதி
1. தாத்தாவின் அறையில் நுழைந்த சித்ராவுக்கு நாற்காலியும், புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களும் அவரில்லாது வெறுமையில் தவிப்பதைப் போல தோன்றியது.
2. அவர் தன் வேலை எல்லாம் முடித்து மதியத்தில் கூட சிறிதுநேரம் தூங்காது புத்தகம் படிப்பவரை சித்ராவின் தம்பி “தாத்தா நீ என்ன பரீட்சை எழுதப் போறயா” என கிண்டல் செய்வான்.
3. “ஆமாண்டா நீங்கலாம் படிக்கணும்னுதான் வாங்கிப் போடறேன் ஆனா யாரும் எடுத்து படிக்க மாடடேங்கறீங்க” என தன் ஆற்றாமையை சொல்வார்.
4. தாத்தாவின் புத்தக சேமிப்பில் சாதிமத பேதமின்றி பகவத் கீதை திருக்குரான், பைபிள் தவிர மார்கீசிய கம்யூனிஸ சித்தாங்கள், கவிதைகள், தமிழ் ஆங்கில நாவல்கள், திரு.கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், சங்க இலக்கியங்கள், சிந்து சமவெளி நாகரிகம் , ஆன்மீக அறிஞர்கள் பற்றி இப்படி பலதரப்பட்ட புத்தகங்கள் உண்டு.
5. அவர் வாழ்நாள் 84ஆண்டுகள் , இறுதிவரை புத்தகத்தோடு அவர் கொண்ட ஈடுபாடு சிறிதும் குறையாதது கண்டு ஆச்சர்யமுற்ற நாட்கள் அவை.
6. அந்த புத்தகங்களை தொடும் போது தாத்தாவின் கைகளைப் பிடிப்பது போல் ஓர் உணர்வு.
7. எதிர்கால சந்ததியை அறிவுசார்ந்த சமூகமாக நல்லபடியாக வளர்க்கப்பட வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வை கண்டு வியந்தாள் சித்ரா.
8. இனி , புத்தகங்களை நான் படிப்பது மட்டுமல்ல தம்பி , மற்றும் தன்னை சுற்றி உள்ளவர்கள் படிப்பதற்கும் தன்னால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தாள் சித்ரா.
9. இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதித்த தாத்தாவின்
புத்தகக் காதலே உண்மைக் காதல் என உணர்ந்தாள் சித்ரா.
10. “இருக்கும் போது யாரும் யாரையும் உணர்வதில்லை” என புகைப்படத்தில் தாத்தா புன்னகைப்பது போல இருந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
