எழுத்தாளர்: சாந்தி சச்சிதானந்தம்
கல்லூரியிலே ஒரு விவாதத்தின் நடுவிலே இருவரும் சிறிது நேரம் நிறுத்தி கண்களைப் பார்த்ததும், கோப தாபங்கள் புன்னகையாய் மாற, நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள்.
திருமணத்திற்கு பின், சண்டை வந்தாலே வலிய அருகில் சென்று. விழிகளை அவள் பார்ப்பாள் அல்லது நான் பார்ப்பேன், சமாதானம் மலரும்.
இன்று அவளின் விழிகள் நிரந்தரமாய் மூடிவிட்டனவே. என்ன செய்வேன் நான்? அவளின் விழிக் கண்டு என் கண்கள் இரத்தம் வடித்தன.
அப்பா வந்து விட்டார்கள், மருத்துவர்கள்! அம்மாவின் விழி கொண்டு செல்ல, என்றான் கௌதம். ஆம், அவளின் விழிகள் என்றுமே உயிர் விழிகள்!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/