எழுத்தாளர்: தி. வள்ளி
சஞ்சனா சஞ்சலத்துடன் கடற்கரையில் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
எதற்கு அருண் அவசரமாக வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வரச் சொன்னான்.
விரைந்து வந்த அருண்,.சஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணீருடன், அவர்கள் காதலைப் பற்றி வீட்டில் சொல்ல நினைத்த நேரத்தில் அவன் அத்தை பெண்ணுடன் அவனுக்கு நிச்சயமான விஷயத்தை கூறினான்.
ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள் சஞ்சனா.
இப்படி கொஞ்சம் கூட போராட்ட குணம் இல்லாமல், தனக்காக ஒரு வார்த்தை கூட அப்பா அம்மாவிடம் கேட்காத ஒருவன் வாழ்க்கையில் சோதனைகளை எப்படி போராடி வெல்வான் ..
இந்த காதல் கை கூடாதது நல்லது என்று தோன்றியது அவளுக்கு.
அவள் கைகளை விடுவித்துக் கொண்டு நடந்தாள் மணலில்..
பின்னணியில் ஒலித்த “ஒரே காதல் ஊரில் இல்லையடா “என்று கமலஹாசன் பாடல் காதில் மோதியது .
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
