எழுத்தாளர்: கௌரி
அந்தி மாலை அழகாய் சிவந்திருந்தது. கடற்கரை ஒட்டிய பங்களா மனோவின் வீடு. சாளரக்கதவைத் திறந்தான். ஆஹா பிரம்மாண்ட உலகம். அலை அலையாய் நீர்க் கற்றைகள். தேநீர் பருகிக் கொண்டே இரசித்தான் மனோ. நான் அவனை சமையலறையில் இருந்து கவனிக்கத் தவறவில்லை. தேநீரை விட அவன் கண்கள் எதையோ பருகுவதாய் ஓர் உணர்வு. அவனருகில் மெல்லச் சென்றேன். அவன் சலங்கையின் ஓசை கேட்டுத் திரும்பினான். பாரேன் எத்தனை அழகு இந்த இயற்கை என்றான் அவன். மின்னலாய் நகர்ந்தாள் ஓர் யுவதி. விக்கித்தோம் இருவரும் அவளழகில்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
