எழுத்தாளர்: மு. லதா
என்னய்யா,
இன்னிக்காச்சும் உருப்படியா ஒரு கதை சொல்வியா?
ரெடி ஸார்…
ஓபன் பண்ணினா, அழகான அந்தி pவானம். நம்ம கதாநாயகி ரொமான்டிக்கா கடற்கரையோரம்
நடந்து வராங்க, அங்க ஒரு அழகான
அலாவுதீன் விளக்க பாக்கறாங்க.
உடனே ஓடிப்போய் அதைக் கைல
எடுத்து தேய்க்கறாங்க.
ஒரே புகை மண்டலம்…இத எடத்துல கலர் லைட் போட்டுக்
கலக்கிறலாம் ஸார்,நம்ம ஆலம்பனா பூதம் வருது,அவங்க. கேக்கறதெல்லாம் தருது,அவங்க
தினச்சதெல்லாம் நடக்குது.ஹீரோவ கழட்டிவிட்டுட்டு பூதத்த கல்யாணம் பண்ணிக்கிறாங்க.இங்கதான் ஸார்
ஒரு ஹிட் சாங் வைக்கிறோம்.
பூதம் பாடுது , தேவி நீ சொல்வதே என் வேதம்…
ஹீரோயின் பாடறாங்க நீயே என்றும் என் செல்லப் பூதம்
எப்பிடி ஸார் கதை ஷூட்டிங்க
எப்போ ஆரம்பிக்கலாம்?
யோவ், செக்யூரிட்டீ…………….
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/