எழுத்தாளர்: க.ஆதிலட்சுமி
வியர்வைத் துளிகள் முகப் பந்தலில் முத்தாடியதால், எனது விழித்திரைக்குள் ஆழ்கடல் அலையில்லாமல் மௌனம் காத்தது. நல்லவேலை , என் கண்ணீர்த்துளிகளைக் கருவிழி களவாடிவிட்டிருந்ததை மட்டும் என்னால் உணர முடிந்தது.இப்பொழுது இருக்கும் நிலையில் உயிர் மட்டும் உறவாய்ப் பயணத்தில் தொடர்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவாவது முடிந்ததே!
காலத்தினை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர எனக்கு வேறொரு நினைப்பும் கண்ணில் புலப்படவில்லை.
சொந்த மண்ணில் பந்தமில்லாமல் பந்தாடப்பட்டுவிட்டமோ? என் கதி மட்டுமல்ல,சொந்தங்களும் கண் கலங்கி நிற்கும் காட்சியே சாட்சியாகிக் கொண்டிருந்த வேளை.
‘ஓவென’ அழுக நினைத்தேன்.
‘என் கண்ணில் அவ்வளவு நீரில்லை’
வேறெப்படி அழுவது? உடலே அழத் தொடங்கியது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/