எழுத்தாளர்: நா. நாகராஜன்
ஜெயகிருஷ்ணன் அந்த காட்சியை காலை ஐந்து மணிக்கு முத்து நகர் கடற்கரையில் எடுக்க வேண்டும் குறைந்த வேலை ஆட்கள் கொண்டு என்றார்.
நாயகி தீபிகா கல்கத்தா வில் இருந்து வந்து ஜி ஆர் டி ஹோட்டலில் இருந்தார்.
அலாவுதீன் டைப் அற்புத விளக்கு மன்மோகன் பொறுப்பு. அவனுக்கு தீபிகா பழக்கம். நடைபயிற்சியாளர்கள் நாலைந்து பேர் மட்டும் வேடிக்கை பார்த்தபடி போனார்கள்.
தூத்துக்குடியில் கூட உப்பு அளத்தில் மலையாள, தமிழ் படங்கள் காலையில் எடுக்கிறார்கள். காமிரா சத்தம் இல்லாமல் காட்சியை படமாக்க, ஒரு கப்பல் போன்ற கார் வந்ததை, அதன் உள்ளே புது தொழில் அதிபர் இருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
ஜெயகிருஷ்ணன் கட் சொன்ன பின்னும் தீபிகா நடந்து கொண்டே இருந்தாள். கார் கதவுகளை திறந்து அவளை ஏற்றுக் கொண்டார் ப்ரதீபன்
வேறு புதிய நாயகி, புதிய கடற்கரையில் எடுக்க ஜெயகிருஷ்ணன், உலகின் பல நாடுகளை அலசினார்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/