எழுத்தாளர்: கி.இலட்சுமி
கடைசியாக நான் அந்த இரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.
அவள் அவனோடு …நான் என் நண்பனோடு…
அலைபாயும் விழிகளோடு புதுமணப்பெண்ணாய் அவளின் உரையாடல் நீள்கிறது.
நண்பனின் கையை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.
ஏனோ நடுக்கம் என்னைத் தொற்றிக் கொள்கிறது.
இனிமேல் தொடமுடியாத தூரத்தில் அவள்.
அசைபோடுகிறேன் அவளோடு இருந்த தருணங்களை…
திரும்பித்தான் பாரேன் கெஞ்சுகிறது கண்கள்.
திரும்பாமலே மறைந்துவிட்டாள் அவள். தண்டவாளத்தில் நாங்கள் இரசித்த பூச்செடியில் சிரிக்கிறது பூக்கள்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/
