10 வரி போட்டிக்கதை: ஜில்லுன்னு   ஒரு  காதல்

by admin
63 views

எழுத்தாளர்: விஜயா  சுப்ரமணீயம்

காலேஜ்,  படிக்கும்  நவனீத்     பல   நாட்களுக்கு   பிறகு   அந்த, ,தண்டவாளத்து   அருகே     வருகிறான்   இந்த   தண்டவாளம்    பக்கத்தில்   தான்    அவன்   குடிசை   இருந்தது,  இளமை காலத்தில்   பல   நாட்கள்   இந்த   தண்டவாளத்தில்    ஓடி      விளையாடி     இருக்கான்,  அப்பொழுதெல்லாம்  நிறைய   பூக்கள்    இருக்கும்,  வண்ண    வண்ண     பூக்களை   பறித்து   சிறுவர்கள்   விளையாடுவார்கள்     “தண்டவாளத்தின்      மேல்      பாலன்ஸ்     பண்ணி   யார்  கீழே      விழாமல்    இருக்கிறார்களோ     அவர்களுககு   ஒரு   பூ   பரிசு, ; 
           பல   நாட்கள்    அந்த  தண்டவாளத்தின்,   மேல்    அமர்ந்து   படித்து  இருககான்,    பெரியவனான   பின்னும்     தண்டவாளம்   அவனை  விடவில்லை     ஜில்லுன்னு    ஒரு    காதல்    உண்டானதே   இந்த   தண்டவாளத்தால்    தான்,
       ஒரு   நாள்   நமீதா      வேகமாக     தண்பவாளத்தின்   பக்கத்தில்   நடந்து   வந்து,,கொண்டு   இருந்தாள், மயக்கும்     மஞ்சப்பூவை     பறிக்க  குனிந்தாள்    நிலை   தடுமாறி    விழுந்தாள்,   யதேச்சையாக     வந்த  நவீனன்    அவளை  விழாமல்   தாங்கி   பிடித்தான்,,அந்த   தண்டவாளம்    பல நாட்கள்    அவர்களுடைய      காதல்   மொழிகளை  கேட்டு    வெட்கி, ,தலை  குனிந்தது
        இங்கும்   விதி  ,விளையாடியது    அவளை   கட்டாயமாக   மாமனுக்கு   கட்டி    வைத்து   விட்டார்கள்,   வேலை    எதுவும்   இல்லாத      நல்ல   வீடு  கூட  இல்லாத,   அவனுக்கு ,   அவளை   பெண் ,கூட  கேட்க  முடியலை
   அவள்   போன  பிறகு   அவனும்    அந்த   இடத்தை   விட்டு   போய்   விட்டான்  ஜில்லுன்னு   பூக்களுடன்   தொடங்கிய   காதல்    அந்த  தண்டவாளத்திலேயே    பூக்களுடன்   கருகி “விட்டது
     நவீனன்     கண்ணில்  ,கண்ணீரீடன     அந்த   தண்டவாளத்தில்   அமர்ந்து  பழைய  நினைவுகளை   அசை   போட்டான்
   காதலா    நட்பா   என்று  புரியாத   வயதில்,   தொடங்கி      மலரும்   முன்னேயே   கருகி  விட்டது.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!