எழுத்தாளர்: நா.பா.மீரா
வீட்டைச்சுற்றி ஒரு முறை பார்வையைச் சுழலவிட்டார் சொக்கலிங்கம் . ஊட்டியின் கொட்டும் பனிக்கு இதமான கனப்பு —- சுற்றிலும் ஆடம்பரமான அந்த வீட்டின் அமைப்பு —– அவர் மனத்துக்கு மிகவும் நெருக்கமான புத்தக அலமாரிகள். அவர் ஒரு புத்தகப்பிரியர்.— வயோதிகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தனிமையைத் தழுவ நேர்ந்த நிலையில் புத்தகங்கள் உற்ற தோழனாய் ஆதரவு தந்தன. இன்றோ — மூப்பின் காரணமாக பார்வை மங்க —- பார்வை வட்டத்திலிருந்து புத்தகங்கள் மறையத்தொடங்கின. ஆடியோக்கள் வாயிலாகவும் நீண்ட நேரம் கேட்க முடியாத சூழ்நிலை —மீண்டும் –மீண்டும் தனிமை —- வெறுமை— சே– என்ன வாழ்க்கை ? பொத்தென்று விழ அந்த சொகுசுச் சோபா அவரைத் தாங்கிக்கொண்டது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/