எழுத்தாளர்: மு. லதா
ஹலோ மைத்து”
“ஹேய் ரமேஷ்,என்ன திடீர்னு போன் பண்ற,என்ன விஷயம்?”
எப்ப வருவ?சம்மர் வெக்கேஷனே
முடியப்போறது.நாம தினமும் ஸ்கூலுக்கு நடந்து போற தண்டவாளப்பாதைல ரெண்டு பூ பூத்திருக்கு.”என்னடா சொல்ற”?”வீடியோவஆன்பண்ணுடி.”
“ஹைய்யா, ஆமாண்டா அழகா இருக்குல்ல.எல்லாத்தையும்
ரொம்ப மிஸ் பண்றேன்”
“சரி சீக்கிரமாவாடி, என்றான் ரமேஷ்.”டேய் இனிமே நான் வரவே மாட்டேண்டா,எங்கப்பாக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு. அப்பா மட்டும் வந்து டிசி வாங்கி வீடு ஷிஃப்டிங் எல்லாம் பாத்துக்குவாராம்.
அப்போ நாம இனிமே பாக்கவே முடியாதா?”ஆமாண்டா “ என்று அழ ஆரம்பித்தாள் மைதிலி.
“டேய் ,அந்தப் பூவ ட்ரெயின் நசுக்காம செடியோட பிடுங்கி உங்க வீட்ல நட்டு வச்சு வளக்கறியா?என்றாள்அழுதுகொண்டே”
“அம்மாகூப்பிடறாங்கடா பை “ என்றபடி போனை கட் செய்தாள்ஆறாம் வகுப்பு படிக்கும்
மைதிலி.மழை பெய்திருந்த ஈரமண்ணிலிருந்து கண்ணீருடன் செடியைப் பிடுங்கினான் ரமேஷ்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
