எழுத்தாளர்: டெய்சி
காலை நேரம் வேக வேகமாக கம்ப்யூட்டர் சென்டர் சென்றவன் தான் எழுதிய போட்டி தேர்வில் தேர்வாகி இருக்கின்றோமா?என்று பதற்றத்துடன் மதிப்பெண்களை சரி பார்த்துக் கொண்டிருந்தான். பணியில் சேர்வதற்கு சரியாக ஒரு மதிப்பெண் குறைந்து தோல்வியடைந்து இருந்தான்.
நன்கு படிக்கக் கூடியவன் பள்ளி கல்லூரி என அனைத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். திடீரென அவனது தாயின் இறப்பு அழுதழுது களைத்து போயிருந்தவன் ஆறுதல் சொல்லி அரவணைக்க வேண்டிய தந்தையும் புது மாப்பிள்ளையாய் மாறிவிட வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
பரவாயில்லை கண்ணா அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று தலை கோத அவனது தாய் இல்லையே தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று தண்டவாளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
ரயில் தூரத்தில் வந்து கொண்டிருந்தது ஒரு இடத்தில் நின்று கண்களை மூடியவன் காலில் கட்டெறும்பு சுள் என்று கடிக்க குனிந்து அதை தேய்த்தான் தண்டவாளத்தின் இடுக்கில் அழகிய இரண்டு சிறு மலர்கள் பூத்துக் குலுங்கி அவனைப் பார்த்து சிரித்தது போல் இருந்தது அந்த நொடியே தண்டவாளத்தை விட்டு நகர்ந்து விட்டான் அந்த இடத்தில் ஒரு செடி முளைத்து மலர்வதற்கு உண்டான எந்த காரணிகளுமே இல்லை.
ஆனால், அந்த இடத்தில் அனைத்தும் நிகழும் போது என்னால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்று தன்னம்பிக்கையோடு தண்டவாளத்தை விட்டு பாதையை நோக்கி நடந்து சென்றான்.
கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவான் என்ற நம்பிக்கையோடு.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/