10 வரி போட்டிக்கதை: நேச மழை

by admin
72 views

எழுத்தாளர்:️ அனுஷாடேவிட்

மழை என்னை தழுவி முத்தமிட ஆரம்பித்ததும் இமை பிரிக்காது அதனை ரசித்தேன்.

நினைவு தரும் அவஸ்தைகளாய் உன் புன்னகை முகம் கண்முன்னே நிழலாடியது.

உன் ஸ்பரிசத்தை உணர முடியாமல் தவிக்கிறேன்.

வந்து போகும் உன் நினைவில் நேசமெனும் உயிர் கொல்லி நோய் என்னை உறங்க விடாமல் இம்சை செய்கிறது.

திரும்பும் திசையெங்கும் நீயே நிறைந்து நிற்க இந்த நேச மழையின் நேச முத்தத்தில் நனைந்து நனைந்து உன் நினைவுகளை நினைத்து பார்ப்பதை தவிர வேறு என்ன தான் நான் செய்ய?

மழையின் வேகம் சற்று குறைந்து சாரலாக தூவ, நினைவிலும் உன் வாசனை சாரல் தெளித்தது.

மழை வரும் பொழுதுகளில் உன் வாசனை உயிருக்குள் ஊடுருவுகிறது.

ஆறு ஆண்டுகள் இன்னும் நீளாமல் எனை பிரிந்து சென்ற நீ எப்போது எனை வந்தடைவாய் எனும் ஆவலிலேயே நேச மழையின் நேசத்தை ரசித்தும் அது தரும் உன் நினைவுகளையும் நொடியும் இமைக்காது உயிருக்குள் உனை தேடுகிறேன்.

காலம் செய்த வினையின் பலனை தனிமை எனும் தண்டனையாய் எனக்களித்து விட்டு நீ மட்டும் என் செய்வாய்?

மழையின் நீரோடு என் விழி நீரும் கலந்து உனை வந்து சேர்ந்து சேதி சொல்லும் என் தேடல்களை. மீண்டும் வந்து விடு. எனை சேர்ந்து விடு.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!