எழுத்தாளர்: மு.லதா
வாங்க ஸார், வாங்கம்மா…
கிளி ஜோஸியம், எலி ஜோஸியம்
பாக்கலாம், 20ரூபாதான் ஸார்.
என்னய்யா சொல்ற என்றான் குமரன்.
நயனு நம்ம ஐயாவுக்கு ஒரு நல்ல
சீட்ட எடுத்துக்கொடுடா கண்ணு…
ஸார், உல்களுக்கு இனிமே யோககாலம்தான், லச்சுமி வந்துருக்கா, ஓட்ட பிச்சிக்கிட்டு
பணம் கொட்டப்போகுது.
என்னய்யா சொல்ற,வாழ்க்கையே
போராட்டமா இருக்கு.இனிமே பேசப்படாது , அடுத்தமாசம்
இதே நாள் என்னத்தேடி ஐயா வருவீங்க பாருங்க.
என்னமோ சொல்ற, ‘இந்தாய்யா
பணம் ‘ என்றபடி நடந்தான் குமரன்.
மறுநாள் அலுவலகம் செல்லும்
வழியில் சாலையில் ஒரே கூட்டம்.
“ஆள் ஸ்பாட் அவுட்டுடா,பரிதாபம்”
எட்டிப் பார்த்தான் குமரன்.
கிளிக்கூண்டில் கிளி இல்லை……..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: