எழுத்தாளர்: வர்ஷணா ஸ்ரீ
ஒரு கிராமத்தில் ஒரு சிறுமியும் அவளின் பாட்டியும் வாழ்ந்து வந்தனர். அவளின் பாட்டி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை ஆவார். அவருக்கு தமிழின் மீதுள்ள பற்றால் தினமும் அந்த சிறுமிக்கு கதைகளை கூறி வந்தார். பாட்டி கூறிய கதைகளை கேட்டு அவளுக்கு புத்தகம் வாசிக்கும் ஆர்வம் வந்தது. இவர்கள் வசிக்கும் கிராமத்தில் ஒரு சிறிய நூலகம் மட்டுமே இருந்தது. இந்த சிறுமி தினமும் நூலகம் சென்று புத்தங்களை படித்தும் பாட்டியிடம் கதைகளை கேட்டும் வந்தாள். நாட்கள் கடந்தன ஒரு நாள் மாலை நேரத்தில் மிக வருத்தத்துடன் வீடு திரும்பினாள். அவளின் பாட்டி என் இவ்வளவு வருத்தமாக இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு அந்த சிறுமி பாட்டி நான் நம் கிராமத்தில் உள்ள அனைத்து புத்தங்களையும் வாசித்துவிட்டேன் இன்னும் புத்தகம் வாசிக்கும் தாகம் அடங்கவில்லை என்றாள். அதற்கு அவளின் பாட்டி புத்தகத்தின் மீது நீ கொண்ட தீர காதலை உன் சொந்த படைப்பில் ஒரு கற்பனை கதையாக உருவாக்கு என்றார். அப்படி உருவான கதையே இது.. அச்சிறுமி வேறுயாருமில்லை இந்த கதையின் எழுத்தாளரே ஆவார்..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/