எழுத்தாளர்: ச.வர்ஷணா ஸ்ரீ
இரயில் தண்டவாளத்தில் ஒரு சிறிய பூச்செடி முளைக்கிறது. அந்த செடி சிறியதாக இருந்தால் மட்டுமே அதன் ஆயுள் நீடிக்கும். ஏனென்றால் அது வளர்ந்தால் இரயிலில் சிக்கி அது அழிந்துவிடும். அதுபோல தான் இந்த சமூகத்தில் பிறந்த பெண் பிள்ளைகளின் நிலை உள்ளது. ஒரு பெண் வளர வளர அவளின் அனைத்து பண்புகளும் வளர்கிறது. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்து வருகின்றனர். இன்றும் சிலர் பெண்களின் வளர்ச்சியை தடுக்கவே நினைக்கின்றனர். ஒரு பெண் தன்னம்பிக்கையுடன் சாதித்துவிடவேண்டும் என போராடுகிறாள்ஆனால் அவளுக்கு இந்த சமூகமே ஏமனாக உள்ளது. தண்டவாளத்தில் முளைத்த அந்த பூச்செடியில் பூத்த வெண்மைநிற பூவின் மீது அதிவேகமாக வந்த இரயில் அழுக்குகளை விட்டுச்சென்றது. மழை பொழிந்தால் அந்த அழுக்கு நீரில் கரைந்துவிடும். அதுபோல ஒரு குடும்பத்தில் ஒரு பெண் சாதித்தால் அவளின் குடும்ப துயரங்கள் அனைத்தும் நீங்கிவிடும். அந்த பூவுக்கும் இரயிலுக்கும் இதயம் இல்லை ஆனால் இச்சமூகத்தில் எல்லோருக்கும் இதயம் உண்டு.. சிந்தியுங்கள்…!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/