எழுத்தாளர்: ஆர். பிருந்தா
அன்று மீராவுக்குப் பிறந்தநாள் என்று அப்பா, அம்மாவுடன் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு வருவதற்குப் பக்கத்தில் உள்ள முருகன் கோயில் சென்றாள். இவர்கள் போய்க் கொண்டு இருந்த போது ஒரு வயதான பெரியவர் இவளிடம் வந்து, “தாயி, சாப்பிட ஏதாவது கொடும்மா” என்று கேட்டவுடன் மீரா சட்டென்று தன் தாயின் கையில் இருந்த
அர்ச்சனைத் தட்டை வாங்கி, அதிலிருந்து இரண்டு வாழைப் பழங்களை எடுத்து அந்தப் பெரியவரிடம் கொடுத்து விட்டாள். அதைப் பெற்றுக் கொண்ட பெரியவர், ” நீ நல்லா இரும்மா” என்று வாழ்த்தி விட்டுச் சென்று விட்டார். உடனே அம்மா பதறிப் போய், “என்ன மீரா, இப்படிப் பண்ணிட்டே? இன்னும் சுவாமிக்கு அர்ச்சனை செய்யலையே?” என்று கேட்டாள். உடனே அப்பா, “ஏன் இப்படிப் பதறிப் போறே? இவருக்குக் கொடுத்தா, முருகனின் ஆசி நம்ம பெண்ணுக்குக் கிடைத்த மாதிரித் தான்; நீ வா, நாம போகலாம்” என்றார்.
முற்றும்.