எழுத்தாளர்: தி.அறிவழகன்
விழாமல் இருக்க பிடிமானம் தேவைப்பட்டது…
பச்சை புள்ள கையை இப்படியா உதறுவாங்க…
அப்பாவை பார்த்து சொன்ன அம்மாவின் சொல், யாரு கையையும் உதறக்கூடாது என்ற பதிவை மூளையில் பதித்தது.
எழுந்து நிற்க ஆரம்பித்ததில் இருந்து நான் பிறருக்காக பிடித்த கரங்கள்….
தம்பி, தங்கை, மகள், மகன், பேரன், பெயர்த்தி, உற்றார், உறவினர் என்று நீண்டு கொண்டே போனது…
விழாமல் இருக்க பிடிமானம் தேவைப்பட்டது…
வயசான ஆளு தடுமாறுறாரு கொஞ்சம் தாங்கி பிடிச்சுக்க கூடாதா.. என்று சொல்ல அம்மா இல்லை…ஆதரவாய் பற்றிக் கொள்ள மனைவியும் இல்லை..
யாரு கையையும் பிடிக்க கூடாது, என்ற பதிவை பதிய மூளையில் இடமும் இல்லை..
நம்பிக்கை வைத்து என் கைகளை மற்றொரு கைகளால் அழுத்தி பிடிக்கிறேன்…
நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது தெரிகிறது…
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/